ஆடு பகை குட்டி உறவா? தன் படத்தை எதிர்த்த தாத்தா அன்புமணி; பேத்தி படத்துக்கு உதவிய ரஜினிகாந்த்!

Published : Dec 11, 2024, 11:38 AM ISTUpdated : Dec 11, 2024, 07:18 PM IST

பிரபல அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள படத்தின் ட்ரைலரை தற்போது ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள நிலையில், இதை சுட்டி காட்டி சிலர் அரசியல் பேச துவங்கியுள்ளனர்.  

PREV
14
ஆடு பகை குட்டி உறவா? தன் படத்தை எதிர்த்த தாத்தா அன்புமணி; பேத்தி படத்துக்கு உதவிய ரஜினிகாந்த்!
Alangu Trailer

சமீப காலமாக அரசியல்வாதிகளின் வாரிசுகள் திரைத்துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி தான் ஒரு தயாரிப்பாளராக திரையுலகில் நுழைந்த, உதயநிதி நடிகராக மாறி பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினராக மாறிய நிலையில், தற்போது துணை முதலமைச்சர் பதவி வகித்து வருகிறார். இவரை தொடர்ந்து மற்றொரு அரசியல் வாரிசும் தயாரிப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

24
Anbumani Daughter Sangamithra

அவர் வேறுயாரும் அல்ல, பாமக கட்சி நிறுவனர் ராமதாஸின் பேத்தியும், பாமக கட்சி தலைவர் அன்புமணியின் மகளுமான சங்கமித்ரா. இவர் தற்போது 'அலங்கு' என்கிற படத்தை தயாரித்துள்ளார். சக்திவேல் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், செம்பன் வினோத் ஜோஸ், காளிவெங்கட், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாய் மற்றும் மனிதர்களுக்கு இடையே உள்ள பந்தம் பற்றிய உணர்வு பூர்வமான உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளது தான் பல விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமணம் எப்போது? தீயாய் பரவும் தகவல்!

34
Rajinikanth Baba movie

ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு பாபா திரைப்படம் வெளியானபோது, இந்த படத்தை மக்கள் யாரும் பார்க்க கூடாது என போர் கொடி தூக்கியவர் சங்கமித்ராவின் தாத்தா ராமதாஸ். இந்த படம் ஒரு அமைதியான ஆன்மீக படமாக இருந்தாலும், இப்படி ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே சிக்கி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த படம் டிஜிட்டல் முறையில் வெளியான போது, சுமார் 10 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. 

44
Rajinikanth Release Alangu Trailer

ராமதாஸ் ரஜினிகாந்த் படத்தை எதார்த்தத்தை சுட்டி காட்டிய நெட்டிசன்கள் ஆடு பகை குட்டி உறவா என கேள்வி எழுப்பி, தன்னுடைய படத்தை அன்று எதிர்த்தவர்களின் வாரிசுக்கு கூட உதவும் மனம் படைத்தவர் ரஜினிகாந்த் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

41 வயதில் 3-வது குழந்தைக்கு தாயாக ஆசைப்படும் பிரபல நடிகை! ஏன் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories