சும்மா பிண்ணிடீங்க வெற்றி..! 'விடுதலை' படம் பார்த்து பிரமித்து போய் பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!

First Published | Apr 8, 2023, 12:08 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த வாரம் வெளியான 'விடுதலை' படத்தை, பார்த்து விட்டு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூரியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்திற்கு பின்னர், சுமார் 4 ஆண்டுகள் கழித்து, வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்பெஷல் ஷோ போட்டு காட்டப்பட்ட நிலையில், வெற்றி மாறன் மற்றும் சூரியோடு படத்தை பார்த்துவிட்டு, சும்மா பிண்ணிடீங்க வெற்றி என வெற்றிமாறனை ஆரத்தழுவி புகழ்ந்து தள்ளி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, காதல், திரில்லர், ஆக்ஷன், ஹாரர், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வெளியானாலும், உயிரோட்டமான கதைகளை படமாக இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரேஉள்ளனர்.  அந்த வகையில், சிறந்த இயக்குனர்களுக்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தரமான கதைகளை தேர்வு செய்து இயக்கி வெற்றி வாகை சூடி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.

செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதருக்கு குழந்தை பிறந்தாச்சு! புகைப்படத்தோடு குட் நியூஸ் சொன்ன நடிகை!

Tap to resize

அசுரன் படத்திற்கு பின்னர், தன்னுடைய அடுத்த படத்தை எடுக்க மிகப்பெரிய கேப் எடுத்துக்கொண்ட வெற்றி,  தங்கம் எழுதிய வேங்கைசாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டு, ஜெயமோகன் எழுதிய 'துணைவன் ' என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து, விடுதலை என்கிற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கான ஹீரோ தேர்வு, பலரையும் முதலில் ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம். காரணம், இது நாள் வரை பல முன்னணி நடிகர்கள் படத்தில், கிச்சு கிச்சு மூட்டும் விதமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்த சூரி தான் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

சூர்யா கீழடி வந்த சீக்ரெட் காரணம் இதுதானாம்? புட்டு புட்டு வச்ச பயில்வான்.. பந்தாடும் ரசிகர்கள்!

பொதுவாக இதுபோன்ற ஒரு எமோஷனல் கதாபாத்திரத்தில், காமெடி நடிகரை போட்டால் எப்படி இருக்கும்? என பலர் நினைத்திருக்கலாம். ஆனால் மிகவும் தைரியமாக சூரியை இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தது மட்டுமின்றி, அவரின் கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டுள்ளார் வெற்றிமாறன். அதேபோல் சூரியன் கான்ஸ்டபிள் வேடம் என்பதை தாண்டி, வெற்றி தன் மீது வைத்த நம்பிக்கைக்காக தன்னை ஒவ்வொரு காட்சியிலும் மெருகேற்றி நடித்துள்ளார்.

சூரியை தாண்டி, இந்த படத்தின் கூடுதல் பலம் என்றால் அது விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் தான்.  மக்கள் போராளியாக அளவான நடிப்பை, அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 'விடுதலை' படத்தின் முதல் பாகம், மார்ச் 31ஆம் தேதி வெளியானதில் இருந்தே, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த படத்தினை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  விடுதலை பட குழுவினருடன் பார்த்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! 42 வயது நடிகை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

படத்தைப் பார்த்துவிட்டு சும்மா பிண்ணிடீங்க வெற்றி என அவரை புகழ்ந்து பாராட்டி உள்ளார். மேலும் சூரி ஏற்கனவே 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்துடன் வெட்டுக்கிளி என்கிற கதாபாத்திரத்தின் நடித்துள்ளதால் ரஜினிகாந்துக்கு மிகவும் பரிச்சியம், எனவே காமெடி நடிகர் என்கிற முத்திரையை மாற்றும் அளவிற்கு மிகவும் எமோஷ்னலாக கதாபாத்திரம் கையாண்டதிற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் வசூலையும் குவித்து வரும் விடுதலை படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில்  தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் தயாரித்துள்ளார். மேலும் விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகர் ஜீவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இவரை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், சேர்த்தன், ராஜு மேனன் போன்ற பல நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு போஸில் முதுகு முதல் இடுப்பு வரை மொத்தமாக காட்டிய ரம்யா பாண்டியன்! மொத்த அழகை பார்த்து ஸ்தம்பித்த இன்ஸ்டா!

Latest Videos

click me!