ரஜினிகாந்தின் 169-வது திரைப்படமான ஜெயிலர் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்தது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் ஜெயிலர் படத்தையும் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், வில்லனாக விநாயகனும் நடித்திருந்தனர். மேலும் ஷிவ ராஜ்குமார், மோகன்லால், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து அசத்தி இருந்தனர்.
25
Jailer movie team
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டு வசூலையும் வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது.
35
nelson and vijay karthikeyan
இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்கிற சாதனையை ஒரே வாரத்தில் படைத்தது ஜெயிலர். இதற்கு அடுத்தபடியாக ரூ.500 கோடி வசூலை கடந்த ஜெயிலர் திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இதனிடையே ஜெயிலர் திரைப்படம் 15 நாட்களில் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஜெயிலர் படத்தின் இந்த அதிரிபுதிரியான வெற்றியால் ரஜினிகாந்த், நெல்சன், கலாநிதி மாறன் உள்பட படக்குழுவினர் அனைவரும் செம்ம ஹாப்பியாக உள்ளனர்.
55
Rajinikanth in Jailer success Party
அந்த மகிழ்ச்சியை ஒரு பார்ட்டி வைத்தும் கொண்டாடி உள்ளனர். ஜெயிலர் படக்குழுவினருடன் அப்படத்தின் சக்சஸ் பார்ட்டியில் சிம்பிளாக கொண்டாடி இருக்கிறார் ரஜினி. இதில் படத்தில் பணியாற்றிய அனிருத், இயக்குனர் நெல்சன் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படமும் எடுத்துள்ளார். ஜெயிலர் சக்சஸ் பார்ட்டி போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.