Jai Bhim
69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் தான் ஆதிக்கம் செலுத்தியதோடு, விருதுகளையும் அள்ளிச்சென்றன. அதன்படி ஆர்.ஆர்.ஆர், கங்குபாய் கத்தியவாடி, சர்தார் உதம் ஆகிய படங்களுக்கு அதிகப்படியான விருதுகள் கிடைத்தன. தமிழில் கடைசி விவசாயி படத்துக்கு இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்துக்கு ஒரு தேசிய விருது மட்டும் கிடைத்தது.
Nani Insta Story
இந்த நிலையில், ஜெய் பீம் படத்துக்கு ஒரு விருது கூட கிடைக்காதது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் நானியும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்கிராமில் பதிவிட்டுள்ள அவர், ஜெய் பீம் என ஹேஷ்டேக் போட்டு, மனமுடைந்து போனதாக எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நானியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.