படத்துல தான் காமெடி பீஸ், ஆனா நிஜத்தில் வேறமாரி... கலாநிதியை விட காஸ்ட்லி கார் வச்சிருக்கும் ஜெயிலர் பட நடிகர்

Published : Aug 25, 2023, 01:05 PM IST

ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த நடிகர் ஒருவர், நிஜ வாழ்வில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக வலம் வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார்.

PREV
14
படத்துல தான் காமெடி பீஸ், ஆனா நிஜத்தில் வேறமாரி... கலாநிதியை விட காஸ்ட்லி கார் வச்சிருக்கும் ஜெயிலர் பட நடிகர்
Jailer

இயக்குனர் நெல்சன் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு காமெடி கேரக்டரை அறிமுகப்படுத்துவார். அதன்படி இதுவரை கோலமாவு கோகிலாவில் ரெடின் கிங்ஸ்லியை அறிமுகம் செய்த அவர், அடுத்ததாக டாக்டர் படத்தில் கிளி, மகாலி போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். அண்மையில் அவர் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கூட தன்ராஜ் என்பவரை காமெடியனாக அறிமுகப்படுத்தி அப்ளாஸ் வாங்கி இருந்தார்.

24
Redin Kingsley

இப்படி நெல்சனால் அறிமுகப்படுத்தப்பட்ட ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது தமிழ் சினிமாவில் மவுசு அதிரித்துள்ளது. கோலமாவு கோகிலாவில் டோனியாக தொடங்கிய ரெடினின் பயணம் ஜெயிலரில் திவ்யாவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவரை படத்தில் காமெடி பீஸ் ஆக பயன்படுத்தி இருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு பணக்காரர் என்கிற தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ரெடின் கிங்ஸ்லிக்கு உள்ள மற்றொரு மாஸ் பின்னணியை பற்றி பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ”படத்துல சண்ட போடுற மாதிரி நடிக்காதீங்க” ரஜினிக்கு பிரபல நடிகர் சொன்ன அட்வைஸ்.. தலைவரின் பதில் இதுதான்..

34
Sivakarthikeyan, Redin Kingsley, Nelson

அவர் கூறியதாவது : “ரெடிங் கிங்ஸ்லியை எல்லாரும் ஒரு காமெடி பீஸ் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் அவர் பெரிய மூளைக்காரர். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் பொருட்காட்சிகளின் குத்தகைதாரர் ரெடின் தான். இதில் அரசுக்கு வரும் வருமானத்தைவிட ரெடின் பன்மடங்கு சம்பாதித்து வருகிறார். அண்மையில் சென்னை தாம்பரத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பொருட்காட்சியும் ரெடினின் மேற்பார்வையில் நடந்தது தான்.

44
Redin Kingsley, Rajinikanth

இப்படி பொருட்காட்சி காண்ட்ராக்ட் மூலம் நன்கு சம்பாதித்து வரும் ரெடின் கிங்ஸ்லியிடம் 300 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். கலாநிதி போன்ற பல தொழிலதிபர்களிடம் இல்லாத சொகுசு கார் கூட ரெடினிடம் இருக்கிறது. ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கூட பிசினஸ் குறித்து தான் பேசிக் கொண்டிருப்பாராம் ரெடின். இன்று மட்டுமல்ல கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக ரெடின் இந்த தொழிலை செய்து வருவதாக பயில்வான் கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... இதென்ன பிக்பாஸ் வீடு மாதிரில இருக்கு... மகள் வீட்டு விசேஷத்திற்கு வாரிசுகளுடன் படையெடுத்து வந்த விஜயகுமார்

Read more Photos on
click me!

Recommended Stories