பிக் பாஸ் தமிழ் சீசன் 7.. மீண்டும் அடிபடும் 2 நட்சத்திரங்களின் பெயர்கள் - இந்த முறையாவது கலந்துக்குவாங்களா?
Ansgar R |
Published : Aug 25, 2023, 11:01 AM IST
கடந்த ஆறு சீசங்களாக தமிழில் வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 விரைவில் துவங்க உள்ளது. அதற்கான போட்டியாளர்களும் விறுவிறுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த பிக் பாஸ் சீசன் 7ல், மூத்த தமிழ் நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விரைவில் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்க உள்ள நிலையில், நிச்சயம் இந்த முறை பயில்வான் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயில்வான் இருக்காருன்னு ரேகா நாயர் இல்லாமல் எப்படி? இந்த முறை பயில்வான் ரங்கநாதன் போல நிச்சயம் பிரபல நடிகை ரேகா நாயர் அவர்களின் இந்த சீசனில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவின் நிழல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து புகழ்பெற்றவர் ரேகா நாயர்.
34
Actor and Anchor Ma Ka Pa Anand
சரி முன்பவே கூறியதை போல இரு நட்சத்திரங்கள் கடந்த சில சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்று பல முறை தொடர்ச்சியாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் கடந்த 6 சீசனிலும் கலந்துகொண்டதாக தெரியவில்லை. அதில் ஒருவர் தான் விஜய் டிவி புகழ் மா கா பா ஆனந்த் அவர்கள். இவருக்கு சின்னத்திரையில் ரசிகர் கூட்டம் அதிகம் என்றபோது இவர் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. ஆனால் இந்த முறை அவர் நிச்சயம் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
44
Kollywood Actress Indraja Roboshankar
அதேபோல தளபதியின் பிகில் படம் வெளியானது முதல் புகழின் உச்சத்திற்கு சென்ற ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் இந்த முறை பிக் பாஸில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவரும் கடந்த இரு சீசன்களாக கலந்துகொள்ளவர் என்று எதிர்பார்த்து ஏமாந்தனர் ரசிகர்கள். மேலும் அவருக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.