படம் ஹிட்டானா ஃபாரின் கார்... கோலிவுட்டில் உருவான புது டிரெண்ட் - காஸ்ட்லி காருக்காக காத்திருக்கும் நெல்சன்..!

Published : Aug 25, 2023, 09:38 AM IST

திரைப்படம் ஹிட் ஆனால் இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பது என்பது தற்போது கோலிவுட்டில் ஒரு டிரெண்டாக மாறி இருக்கிறது. அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

PREV
15
படம் ஹிட்டானா ஃபாரின் கார்... கோலிவுட்டில் உருவான புது டிரெண்ட் - காஸ்ட்லி காருக்காக காத்திருக்கும் நெல்சன்..!
Car gift for Directors

ஒரு திரைப்படம் உருவாவதற்கு முக்கிய புள்ளியாக இருப்பவர் இயக்குனர் தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் இயக்குனரை சாடும் ரசிகர்கள், வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்களை கொண்டாடவும் தவறியதில்லை. அந்த வகையில், தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பது என்பது ஒரு புது டிரெண்டாக மாறி உள்ளது. அப்படி காஸ்ட்லி கார்களை பரிசாக பெற்ற இயக்குனர்களைப் பற்றி பார்க்கலாம்.

25
லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக இருப்பவர் கமல்ஹாசன் தான். அவரின் தீவிர ரசிகனான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவருக்காக ஒரு தரமான கம்பேக் படம் ஒன்றை கொடுத்திருந்தார். அது தான் விக்ரம். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் திக்குமுக்காடிப் போன கமல், லோகேஷுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதுவும் சாதாரண கார் இல்லை ஃபாரின் கார். அவர் லோகேஷுக்கு பரிசளித்த லெக்சஸ் காரின் விலை ரூ.80 லட்சம் இருக்கும்.

35
ஸ்ரீகாந்த் ஒடேலா

தெலுங்கில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் தசரா. நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்ததோடு பிளாக்பஸ்டர் வெற்றியையும் ருசித்தது. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கினார். இவர் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். தசரா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.

இதையும் படியுங்கள்... தமிழ்நாடா? மலேசியாவா?... ஒருவழியாக லியோ ஆடியோ லாஞ்சுக்கு இடம் கிடைச்சாச்சு - எங்கு... எப்போது? முழு விவரம் இதோ

45
மாரி செல்வராஜ்

உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இப்படத்தை தயாரித்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் மாரி செல்வராஜுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

55
நெல்சன்

கார் பரிசாக பெற்ற இயக்குனர்கள் பட்டியலில் அடுத்ததாக இணைய உள்ளது நெல்சன் தானாம். பீஸ்ட் தோல்விக்கு பின் ரஜினியை வைத்து ஜெயிலர் என்கிற தரமான மாஸ் ஹிட் படத்தை கொடுத்து வெறித்தனமாக கம்பேக்கும் கொடுத்திருக்கிறார் நெல்சன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சனுக்கு கார் பரிசளிக்கு ஐடியாவில் தயாரிப்பு தரப்பு உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதுவும் காஸ்ட்லி கார் ஆக தான் இருக்கும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... TRP ரேட்டிங்கில் தாறுமாறு சாதனை செய்த கயல் சீரியல்..! கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்..!

Read more Photos on
click me!

Recommended Stories