தமிழ்நாடா? மலேசியாவா?... ஒருவழியாக லியோ ஆடியோ லாஞ்சுக்கு இடம் கிடைச்சாச்சு - எங்கு... எப்போது? முழு விவரம் இதோ

Published : Aug 25, 2023, 08:34 AM ISTUpdated : Aug 25, 2023, 08:51 AM IST

Thalapathy vijay's Leo Audio Launch : லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறும் என இழுபறி நீடித்து வந்த நிலையில், ஒருவழியாக அதற்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
தமிழ்நாடா? மலேசியாவா?... ஒருவழியாக லியோ ஆடியோ லாஞ்சுக்கு இடம் கிடைச்சாச்சு - எங்கு... எப்போது? முழு விவரம் இதோ
thalapathy vijay lokesh kanagaraj

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்து உள்ளார். லியோ பான் இந்தியா படமாக உருவாகி உள்ளதால் இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் லியோ முன்னிலையில் உள்ளது.

24
Leo movie

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கடைசியாக குருவி படத்தில் இணைந்து நடித்த இந்த ஜோடி தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ளது.

இதையும் படியுங்கள்... டூ பீஸ் டிரஸ்.. மொத்த அழகையும் கவர் பண்ண மறந்த நடிகை பூனம் பஜ்வா - அவர் அழகில் கிரங்கிபோன நெட்டிசன்கள்!

34
leo Vijay

இதனிடையே லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச்சை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதனை முதலில் மதுரையில் மாநாடு போல நடத்த உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அந்த திட்டத்தை கைவிட்ட படக்குழு மலேசியாவில் நடத்தலாம் என முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வந்தது. ஆனால் அங்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக தற்போது அதிரடி முடிவு ஒன்றை படக்குழு எடுத்துள்ளது.

44
Leo Audio Launch

அதன்படி சென்னையிலேயே லியோ ஆடியோ லாஞ்ச்சை நடத்திவிடலாம் என்கிற முடிவுக்கு படக்குழு வந்துள்ளதாம். செப்டம்பர் மாத இறுதியில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் லியோ ஆடியோ லாஞ்ச் நடக்க இருக்கிறதாம். விஜய் கடைசியாக நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இதே இடத்தில் தான் நடைபெற்றது. அதைவிட பிரம்மாண்டமாக லியோ ஆடியோ லாஞ்சை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அப்பறம் என்ன குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா நண்பா..!

இதையும் படியுங்கள்... இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கமல்ஹாசனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories