இதென்ன பிக்பாஸ் வீடு மாதிரில இருக்கு... மகள் வீட்டு விசேஷத்திற்கு வாரிசுகளுடன் படையெடுத்து வந்த விஜயகுமார்

First Published | Aug 25, 2023, 11:36 AM IST

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா வீட்டு விசேஷத்தில் நடிகர் அருண்விஜய் உள்பட அவரது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

vijayakumar Family

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2 மனைவிகள் கொண்ட நடிகர் விஜயகுமாருக்கு மொத்தம் 6 பிள்ளைகள். இதில் முதல் மனைவி முத்துகண்ணுவை கடந்த 1969-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த், இதையடுத்து மஞ்சுளாவை 1976-ம் ஆண்டு மணந்தார்.

anitha vijayakumar family

நடிகர் அருண் விஜய், அவரது சகோதரிகள் அனிதா மற்றும் கவிதா ஆகியோர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள் ஆவர். அதேபோல் வனிதா விஜயகுமார், பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள்.

Tap to resize

vijayakumar daughters

இதில் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். தற்போது முதல் மனைவி முத்துக்கண்ணு உடன் வாழ்ந்து வருகிறார் விஜயகாந்த். வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு பிரிந்து சென்றுவிட்டதால், அவரைத்தவிர மற்ற 5 பேரும் தந்தையுடன் ஒன்றாகவே இருக்கின்றனர்.

anitha vijayakumar

இந்நிலையில், அருண் விஜய்யின் சகோதரி அனிதா தற்போது புதுவீடு கட்டி இருக்கிறார். இந்த புதுவீட்டின் கிரஹப்பிரவேசம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் விஜயகுமார் தனது மனைவி முத்துக்கண்ணு மற்றும் வாரிசுகளுடன் வந்து கலந்துகொண்டுள்ளார். வனிதா மட்டும் இந்த விசேஷத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்... இவங்க தான் வனிதா விஜயகுமாரின் அக்கா அனிதா.. "மார்க்கெண்டேய குடும்பம் போல" - உலகம் சுற்றும் சகோதரிகள்!

anitha vijayakumar sisters

விஜயகுமார் மகள் அனிதா, கோகுல கிருஷ்ணன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா என்கிற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் அனிதாவின் மகள் தியா வெளிநாட்டில் படித்து வருகிறார். 

Arun vijay Sisters

புது வீட்டு கிரஹப்பிரவேசத்தின்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா. அதில் அருண் விஜய் தனது சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், விஜயகுமார் தனது வாரிசுகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவை இடம்பெற்று உள்ளன.

anitha vijayakumar New home

இதுதவிர விஜயகுமார் குடும்பத்து பெண்கள் அனைவரும் ஒன்றாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள், இவங்கள வச்சு ஒரு பிக்பாஸ் ஷோவையே நடத்தலாம் போல கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அனிதா வீட்டு கிரஹப்பிரவேச புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... இவங்க குடும்பத்துக்கே வயசு ஏறாதோ..? USAல் 55வது பிறந்தநாளை கொண்டாடிய கவிதா விஜயகுமார் - யாருனு தெரியுதா?

Latest Videos

click me!