honey rose
கேரளாவை சேர்ந்தவர் ஹனி ரோஸ். 14 வயதிலேயே திரையுலகில் அறிமுகமான இவர் முதன்முதலில் பாய் பிரெண்ட் என்கிற மலையாள படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹீரோயினின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 16 வயதில், முதல் கனவே என்கிற தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஹனி ரோஸ். இப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்தார்.
Actress honey rose
இதையடுத்து தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வந்த ஹனி ரோஸ், சிங்கம்புலி படத்துக்கு பின்னர் 8 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த ஹனி ரோஸ் கடைசியாக தமிழில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் பட்டாம்பூச்சி. இதன்பின்னர் மலையாள திரையுலகில் பிசியாகிவிட்டார்.
honey rose photos
கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து வரும் ஹனி ரோஸை பார்ப்பதற்கென மிகப்பெரிய கூட்டமே வருவதால், அவருக்கு தற்போது இதுவே பிசினஸ் ஆகிவிட்டது. ஒரு படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை இப்படி கடை திறப்பு விழாக்களுக்கு சென்றே சம்பாதித்து விடுகிறாராம்.
honey rose hot photos
அண்மையில் கூட ஆந்திரா மாநிலத்தில் மார்கப்பூர் என்கிற பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்கு ஹனி ரோஸை தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதை ஏற்று ஹனி ரோஸும் அதில் பங்கேற்றார். அந்த கடை திறப்பு விழாவுக்காக அவர் ரூ.50 முதல் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தெலுங்கு ஊடங்களில் செய்தி வெளியாகி உள்ளது.