அட அந்த கவர்ச்சி கன்னியா இப்படி மாறிட்டாங்க? அப்செட்டான ரசிகர்கள் - நடிகர் பரத்தின் நாயகியை நியாபகம் இருக்கா?
பிரபல தமிழ் மற்றும் மலையாள மொழி நடிகை பூர்ணாவின் இயற்பெயர்தான் ஷம்னா காசிம். கேரளாவின் கண்ணூரில் பிறந்த இவர், அங்கேயே தனது பட்டப் படிப்பை முடித்து கொச்சியில் வசித்து வந்த நிலையில் திரைப்படத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
South Indian Actress Shamna Kasim
கடந்த 2004ம் ஆண்டு வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்கின்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலக பிரவேசம் அடைந்தார். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எட்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார் பூர்ணா.
Malayalam Actress Shamna Kasim
அதன் பிறகு தமிழில் கடந்த 2008ம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் பிரபல நடிகர் பரத்தின் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் களமிறங்கினார் பூர்ணா.
Kollywodd Actress Poorna
அதன் பிறகு துரோகி, அர்ஜுனன் காதலி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன் மற்றும் தகராறு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வந்த நடிகை பூர்ணா, பிற மொழி படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் பெரிய அளவில் இவர் சிறந்த நடிகையாக வலம்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Mollywood Actress Shamna Kasim
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஷானிட் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூர்ணாவுக்கு தற்பொழுது ஒரு குழந்தை உள்ளது. சிக்கென்ற உடலோடு காட்சி அளித்து வந்த பூர்ணா தற்பொழுது திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் எடை கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பூர்ணாவிற்கு இப்பொது வயது 34 என்பதும் குறிப்பிடத்தக்கது.