தமிழ் சினிமாவில் விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள எஸ்.ஏ.சி, சமீப காலமாக பல்வேறு படங்களில் வலுவான துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ட்ராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை படத்திலும் நடித்து அசதி இருந்தார்.
மேலும் இந்த சீரியலில் 'பூவே பூச்சூடவா' சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா மற்றும் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரில் நாயகியாக நடித்து வந்த அஸ்வினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
ஏற்கனவே நடிகை ராதிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சித்தி, அண்ணாமலை, சித்தி 2, வாணி ராணி, போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே நேரம் தற்போது விஜய் டிவியில் இவர் நடிக்க உள்ள சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.