பிகினி உடையணிந்து காத்துவாக்குல கவர்ச்சியை அள்ளித்தெளித்த அனசுயா பரத்வாஜின் டூமச் கிளாமர் கிளிக்ஸ் இதோ

First Published | Jun 16, 2023, 2:56 PM IST

புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அனசுயா பரத்வாஜின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Anasuya Bharadwaj

ஐதராபாத்தை சேர்ந்தவர் அனசுயா பரத்வாஜ். MBA படித்து முடித்ததும் HR ஆக பணியாற்றி வந்த இவர் தொகுப்பாளராகவும் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் இவருக்கு சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அதையெல்லாம் அவர் ஏற்க மறுத்தார்.

Anasuya Bharadwaj

இதையடுத்து 2010-ம் ஆண்டு சுஷாங் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை அனசுயாவுக்கு இரண்டு ஆண் குழந்தையும் பிறந்தன. குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கினார் அனசுயா.


Anasuya Bharadwaj

அந்த வகையில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது ஜபர்தஸ்த் தான். காமெடி நிகழ்ச்சியான அதில் தொகுப்பாளராக மட்டுமின்றி அதில் கவர்ச்சி நடனமாடி இவர் கொடுக்கும் எண்ட்ரிக்காகவே அந்நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம்.

Anasuya Bharadwaj

ஜபர்தஸ்த் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக அவரை சினிமாவில் நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் படையெடுத்தனர். இதற்கு கணவரும் ஓகே சொன்னதை அடுத்து சினிமாவிற்குள் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் அனசுயா.

Anasuya Bharadwaj

முதல் படமே நாகார்ஜுனாவுடன் நடித்த அனசுயாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது சுகுமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ரங்கஸ்தலம் தான். இப்படத்திற்காக அனசுயாவிற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... ராமன் Vs ராவணன்: தென்னிந்தியாவில் ராவணன் ஏன் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.?

Anasuya Bharadwaj

இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வந்த அனசுயா, அல்லு அர்ஜுனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான புஷ்பா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை அனசுயா நடித்து வருகிறார்.

Anasuya Bharadwaj

நடிகை அனசுயா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு, இவர் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தை விமர்சித்ததன் காரணமாக அவரது ரசிகர்கள் அனசுயாவை ஆண்ட்டி என கிண்டலடித்ததோடு மட்டுமின்றி அந்த ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர். 

Anasuya Bharadwaj

இதையடுத்து விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகாரும் அளித்தார் அனசுயா. சமீபத்தில் கூட விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு பணம் கொடுத்து தன்னை பற்றி அவதூறாக கமெண்ட் செய்யச் சொல்வதாகவும் அனசுயா குற்றம்சாட்டி இருந்தார்.

Anasuya Bharadwaj

நடிகை அனசுயாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும், அவர் கவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார். சமீபத்தில் குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த அனசுயா, அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

Anasuya Bharadwaj

வெள்ளை நிற பிகினி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை நடிகை அனசுயா பரத்வாஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பொம்மைக்கு உயிர் கொடுத்து ஆடியன்ஸ் உயிர காவு வாங்கிட்டீங்களே! பொம்மை படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

Latest Videos

click me!