sivaji the boss
ரஜினிகாந்தும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்த திரைப்படம் தான் சிவாஜி தி பாஸ். இப்படத்தை பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தான் தயாரித்து இருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா, சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, விவேக், கொச்சின் ஹனிபா, சுமன், மணிவண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
sivaji the boss
அதுமட்டுமின்றி கே.எஸ்.ஆனந்த் ஒளிப்பதிவு, கலை இயக்குனராக தோட்டா தரணி என சிவாஜி படம் முழுக்க பிரம்மாண்டங்கள் நிறைந்திருந்தன. பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் நினைவாக ஏவிஎம் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள கார் மற்றும் இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.
இதையும் படியுங்கள்... பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு - வைரலாகும் வீடியோ
sivaji the boss
இந்நிலையில், சிவாஜி படத்தை பற்றி பலரும் அறிந்திடாத சில சீக்ரட்டுகளை பற்றி தற்போது பார்க்கலாம். சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது சுமன் நடித்த ஆதிசேஷன் கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் தேர்வு செய்தது சத்யராஜ் தானாம். ஆனால் அந்த கேரக்டரில் முக்கியத்துவம் இல்லை எனக்கூறி நடிக்க மறுத்துவிட்டாராம் சத்யராஜ். இதையடுத்து மோகன்லால், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முயற்சி செய்த ஷங்கர், யாரும் நடிக்க முன் வராததால் இறுதியாக சுமனை ஒப்பந்தம் செய்தாராம்.
sivaji the boss
அதேபோல் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களான ராஜா மற்றும் சாலமன் பாப்பையா ஆகியோரையும் இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார் ஷங்கர். அதிலும் குறிப்பாக சாலமன் பாப்பையா நடித்த காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன. அங்கவை சங்கவை என அவர் பேசிய வசனமும் பாபுலர் ஆனது. ஆனால் இந்த படத்திற்கு பின்னர் இனி சினிமாவில் நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டார் சாலமன் பாப்பையா. இதற்கு காரணம் இயக்குனர் ஷங்கர் தானாம். ஏனெனில் இப்படத்தில் அங்கவை சங்கவை என இரண்டு பெண்கள் கரு நிறத்தில் இருப்பதை கிண்டலடிக்கும் படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதில் சாலமன் பாப்பையாவுக்கு சுத்தமாக உடன்பாடில்லையாம். பின்னர் படத்தின் இறுதியில் அவர்களுக்கு சிகப்பாக இருக்கும் மாப்பிள்ளை கிடைப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி தான் சாலமன் பாப்பையாவை கமிட் செய்தாராம் ஷங்கர். ஆனால் இறுதியில் படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகளையெல்லாம் கட் செய்ததால், கடுப்பான சாலமன் பாப்பையா இனி சினிமாவிலேயே நடிக்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ