MGR
எம்.ஜி.ஆர்
சினிமாவில் நடிகராக கலக்கி வந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். அதிமுக என்கிற கட்சி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் தான். இவர் தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். இந்தியாவிலேயே முதல்வரான முதல் நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரும் எம்.ஜி.ஆர் தான்.
Kamalhaasan
கமல்ஹாசன்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வரும் கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கி தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியில் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார் கமல்.
Vijayakanth
விஜயகாந்த்
சினிமாவில் சமூக கருத்துள்ள வசனங்களை அதிகம் பேசி மக்கள் மத்தியில் பிரபலமான விஜயகாந்த், அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்னர் அசுர வளர்ச்சி கண்டார். குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய கட்சியான திமுகவை பின்னுக்கு தள்ளி சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக அமரும் அளவுக்கு ஆளுமை கொண்டவராக விளங்கினார்.
sarathkumar
சரத்குமார்
தமிழ் சினிமாவின் கம்பீரமான நடிகர் என்றால் அது சரத்குமார். சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த ஆண்டு 2 தொகுதிகளையும் அவரது கட்சி வெற்றி பெற்றது.
karunas
கருணாஸ்
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் புலிப்படை என்கிற கட்சியை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
T. Rajendar
டி.ராஜேந்தர்
தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த டி.ராஜேந்தரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் தான். இவர் லட்சிய திமுக என்கிற கட்சியையும் நடத்தி வந்தார்.
Radha Ravi
ராதாரவி
தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ராதா ரவி. அரசியல் மீது ஆர்வம் கொண்ட இவர் திமுகவின் மூலம் தன் அரசியல் பணிகளை தொடங்கி பின்னர் அதிமுகவிற்கு தாவினார். தற்போது பாஜகவில் அரசியல் பணியாற்றி வருகிறார். இவர் ஒருமுறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.