நான் வாய் திறந்தா சமந்தாவின் மானம் போயிரும்... கொந்தளித்த தயாரிப்பாளர் சிட்டிபாபு

Published : Apr 26, 2023, 12:37 PM IST

நடிகை சமந்தா கிண்டலடித்ததை பார்த்து கடுப்பான பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு சமீபத்திய பேட்டி மூலம் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
நான் வாய் திறந்தா சமந்தாவின் மானம் போயிரும்... கொந்தளித்த தயாரிப்பாளர் சிட்டிபாபு

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே நடிகை சமந்தா குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் நடிகை சமந்தா குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.

24

குறிப்பாக நடிகை சமந்தா, ஸ்டார் ஹீரோயின் என்கிற அந்தஸ்த்தை இழந்துவிட்டதாக கூறிய அவர், அவர் பட விழாக்களில் அழுது அனுதாபம் தேடுவதாகவும் சாடினார். இதுபோன்ற சீப்பான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்களை நடிகை சமந்தா தவிர்க்க வேண்டும் என கூறிய அவர், சமந்தா பொய் சொல்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தயாரிப்பாளர் சிட்டிபாபுவின் இந்த பேச்சு தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' படத்தை தடை செய்ய வேண்டும்..! இந்திய தேசிய லீக் புகார்..!

34

இதையடுத்து தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு சமந்தா தரமான பதிலடி கொடுத்திருந்தார். அதன்படி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘காதில் அதிகம் முடி வளர்வது ஏன் என கூகுளில் தேடினேன், அதில் அதிகளவு ஹார்மோன் சுரப்பதால் தான் இப்படி முடி வளரும் என வந்தது, அது யார் என்று உங்களுக்கே தெரியும்’ என குறிப்பிட்டு இருந்தார். தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு காதில் அதிகளவு முடி இருக்கும், அவரை கிண்டலடிக்கும் விதமாக தான் சமந்தா இந்த பதிவை போட்டிருந்தார்.

44

சமந்தாவின் இந்த பதிவை பார்த்து டென்ஷன் ஆன தயாரிப்பாளர் சிட்டிபாபு, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகை சமந்தாவை சரமாரியாக சாடி உள்ளார். அதில், என் காதுல இருக்கிற முடியைப் பற்றி பேசாமல் என் வார்த்தையில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் மட்டும் வாயைத் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என காட்டமாக பேசி உள்ளார். சிட்டிபாபுவின் இந்த பேச்சுக்கு சமந்தா பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  தனுஷின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு! ஆப்பு வைத்த மாவட்ட ஆட்சியர்! இன்று அனுமதியோடு ஆரம்பமான படப்பிடிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories