தளபதி விஜய், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். எனவே இவரை பற்றி என்ன தகவல், வெளியானாலும் அது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் தற்போது, விஜய் தன்னுடைய அம்மா ஷோபா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தன்னுடைய அப்பா - அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்றாலும், கடந்த ஓரிரு வருடத்திற்கு முன்னர், தன்னுடைய அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையிடம் பேசாமல் இருந்து வருகிறார். தந்தையுடன் பேசவில்லை என்றாலும், தன்னுடைய அம்மா ஷோபா அடிக்கடி போனில் பேசுவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் வெளியே செல்வது மற்றும் அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது என ஒரு மகனாக தன்னுடைய அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இதனை பலமுறை சோபாவும் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்த இடுப்ப பார்த்தா ஷகீலாவே ஷை ஆகிடுவாங்க! சேலையை இழுத்து சொருகி சோசியல் மீடியாவை சூடாக்கிய திவ்யா துரைசாமி!
எஸ் ஏ சி மகனை சமாதானம் செய்ய, பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. மேலும் விஜய் தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் மற்றும் சதாபிஷேகம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து, வாரிசு ஆடியோ லாஞ்சில் பெற்றோரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது என சில, விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் சத்தமில்லாமல் சைலண்டாக, ஒற்றை புகைப்படத்தின் மூலம் முற்று புள்ளி வைத்துள்ளார் தளபதி. விஜய் தன்னுடைய அம்மா - அப்பாவின் 50-வது திருமண நாள் அன்று, அவரின் தாயார் ஷோபாவுடன், எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இதில் ஒன்றுமே தெரியாத குழந்தை போல் விஜய், தன்னுடைய அம்மாவின் கால் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஷோபா ஒரு சேரில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தளபதி விஜய் கடைசியாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அதிகார பூர்வமாக படக்குழுவே அறிவித்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இணைந்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயத்தில் பதறும் சீயான் விக்ரம்! சீண்டி கொண்டே இருந்ததால் பொங்கிய பா.ரஞ்சித்! படப்பிடிப்பில் வெடித்த பிரச்சனை!