சமீப காலமாகவே நடிகைகள், ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக சில போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், பிரியா பவானி ஷங்கருக்கு பிறகு, செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்துள்ளவர் திவ்யா துரைசாமி. இவர் ஏற்கனவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார். முன்னணி ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பச்சை நிற சேலையில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... இடையழகை கொஞ்சம் எடுப்பாக காட்டி, எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட, அவை தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.