தமிழ் சினிமாவில் தன்னுடைய 14 வயதிலேயே நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் யாஷிகா ஆனந்த். இவர் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த, இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார். இதுவே இவரது அறிமுக படமாகவும் அமைந்தது.
யாஷிகாவை, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்த திரைப்படம் என்றால் அது நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான். ஆனால் இந்த படத்தில் அடல்ட் காமெடி சற்று தூக்கலாகவே இருந்ததால், பல்வேறு விமர்சனங்களுக்கும் இப்படம் ஆளானது.
18 வயதிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக நுழைந்த யாஷிகா, சிறு வயது பெண் என்றாலும் மிகவும் மெச்சூடாக... இந்த விளையாட்டை கொண்டு சென்றார். சாமர்த்தியமாக விளையாடிய போதிலும் இவர் நடிகை ஐஸ்வர்யா தாத்தாவுக்கு ஓவராக ஜால்ரா போடுகிறார், என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், மக்களின் வாக்குகள் குறைவாக பெற்று 98 வது நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த யாஷிகா ஆனந்த், எதிர்பாராத விதமாக விபத்திலும் சிக்கி அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளார். பட வாய்ப்புக்காக மீண்டும் தன்னுடைய கவர்ச்சி அலப்பறையை அவிழ்த்து விட்டுள்ள யாஷிகா ஆனந்த், சில அதிரவைக்கும் ஹார்ட் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் தங்க நிற உடையில், கிக் ஏற்றும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அரைநிர்வாண கோலத்தில் வெளியான 'செவ்வாய்கிழமை' பட நடிகை பாயல் ராஜ்புத் போஸ்டர்!