தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தொடங்கி, பின் தமிழ் திரைப்பட துறையில் மாபெரும் வெற்றிப்படங்களை உருவாக்கியதோடு, அகில உலக அளவில் திரைத்துறையில் அழியாப் புகழ்பெற்ற நடிகர் அஜித்.
அதை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில் வரும் 2023 மே 1' ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிடுகிறது ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தென்னிந்தியா முழுவதும் 400 திரையரங்குகளில் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிட ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனர் சோழா பொன்னுரங்கம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
அஜித்குமாரின் அன்பு ரசிகர்களும், திரை உலக கலைஞர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இந்த ‘அமராவதி’ திரைப்படத்தின் மறு வெளியிட்டிற்கு ஒத்துழைக்க வேண்டுமென தயாரிப்பாளர் ’சோழா’ பொன்னுரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.