பயத்தில் பதறும் சீயான் விக்ரம்! சீண்டி கொண்டே இருந்ததால் பொங்கிய பா.ரஞ்சித்! படப்பிடிப்பில் வெடித்த பிரச்சனை!

First Published | Apr 25, 2023, 5:19 PM IST
நடிகர் விக்ரமுக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் இடையே 'தங்கலான்' படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை வெடித்ததாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமா... ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் சீயான் விக்ரம். தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உயிர் போகும் அளவிற்கு கூட ரிஸ்க் எடுத்து நடிக்க துணிந்தவர். சமீப காலமாக, மூத்த இயக்குனர்களை விட, வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு தன்னுடைய படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார்.
 

அந்த வகையில் இவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'மகான்', மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்த 'கோப்ரா' ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய ஹைப் கொடுத்தாலும், படம் படு மோசமான தோல்வியை சந்தித்தது. 

அடுத்த படத்தில் லெஜெண்ட் சரவணனின் புதிய கெட்டப் இது தானா..! சும்மா மாஸாக இருக்காரே... வைரலாகும் போட்டோஸ்!
 

Tap to resize

கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியாகி, ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படம் என்றால் அது கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்தது வெளியான, ராஜாப்பாட்டை, தாண்டவம், ஐ, 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி ஸ்கோயர், கடாரம் கொண்டான், மஹான், கோப்ரா போன்ற படங்கள் போன்றவை தோல்வி படங்களாக மட்டுமே அமைந்தது.
 

Ponniyin Selvan

எனினும் சற்று ஆறுதல் தருவது போல் மல்டி ஸ்டார் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் அமைந்தது. 

குந்தவையின் கியூட்னஸை ரசிக்க 2 கண்கள் போதாது.! ரசிகர்களை பெருமூச்சு விடவைத்த த்ரிஷா.. PS2 ப்ரோமோஷன் போட்டோஸ்!

விக்ரம் இப்படி தொடர் தோல்வி படங்களை கொடுப்பதற்கு முக்கிய காரணம் அவர் ஒன் லைன் மட்டுமே கேட்டுவிட்டு படங்களில் நடிப்பது தான் என்றும், எனவே அவர் தீவிரமாக கதையை கேட்ட பின்பு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  குறிப்பாக கோப்ரா, மகான், போன்ற படங்களில் எல்லாம் ஏன் விக்ரம் நடித்தார் என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
 

இந்நிலையில் எப்படியாவது வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என, தற்போது விக்ரம் கையில் எடுத்துள்ள திரைப்படம் தான் 'தங்கலான்'. கேஜிஎப் பட பாணியில் 3d தொழில்நுட்பத்தில் உருவாக்கி வரும் 'தங்கலான்' படத்தில் ரிஸ்க் எடுத்து, உடலை வருத்தி, வெய்யில், காடு, மழை, என அலைந்து திரிந்து நடித்து வருகிறார் விக்ரம். இவ்வளவு ரிஸ்க் எடுக்குறதுக்கு படம் வொர்த்தாக இருக்க வேண்டும் என்கிற பதட்டத்திலும்...  இப்படத்தை யாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் எங்கிற பயத்திலும் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் அடுத்தடுத்து என்ன சீன் வரப்போகிறது, எப்படி காட்ட போகிறீர்கள்.. என விக்ரம் துருவி துருவி கேள்வி கேட்டு வந்ததாகவும் ஒரு நிலையில் சற்று பொங்கி தன்னுடைய கோபத்தை பா.ரஞ்சித் வெளிப்படுத்தி விட்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

23 வருடமானாலும் குறையாத காதல்! அஜித் கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிபிடித்த.. கியூட் போட்டோவை பகிர்ந்த ஷாலினி!
 

இது குறித்து பிரபல சினிமா விமர்சகரான செய்யாறு பாலு, 'தங்கலான்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் விக்ரமுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து நானும் கேள்விப்பட்டேன் என, தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நடிகர் விக்ரம் கதை கேட்கும் போதே 100 டவுட் கேட்பாரு ஆனால் கதையைக் கேட்டுவிட்டால், இயக்குனரை முழுசா நம்பக்கூடிய ஒரு மனிதர். இயக்குனரிடம் அடுத்த படம் பண்ணலாம் என கமிட்மெண்ட் கொடுத்தாலும், அவர் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தால் அடுத்ததாக அந்த இயக்குநரை திரும்பிய பார்க்க மாட்டார்.
 

நடிகர் விக்ரம் இயக்குனரை முழுசாக நம்பியதால் உருவான படங்கள் தான் அந்நியன், ஐ, போன்ற படங்கள். குறிப்பாக ஐ படத்தில் வேறு எந்த நடிகராக இருந்தாலும் பாதியிலேயே ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி இருப்பார். சமீப காலமாக அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருவதாலும், தோல்வி பயத்தாலும் இப்படி கேட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ராம் சரண் மனைவி உபாசனாவுக்கு நடந்த வளைகாப்பு! பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!

மேலும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை விட்டு விக்ரம் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தை, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!