ஜெயிலர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... சிவகார்த்திகேயனுடன் மோதப் போகிறாரா ரஜினி? - பரபரப்பாகும் கோலிவுட்

First Published | Apr 25, 2023, 4:13 PM IST

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரைப்பாற்று தான் நடிக்க கற்றுக்கொண்டேன் என்றும் பல மேடைகளிலே ஓப்பனாக சொல்லி உள்ளார் சிவா. அப்படி ரஜினியின் தீவிர ரசிகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி உள்ளது.

மண்டேலா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளையும் வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் தான் மாவீரன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... ரஜினி முன் தயாரிப்பாளரிடம் டீல் பேசி.. தந்தைக்கு தனுஷ் மகன் வாங்கித்தந்த தரமான வாய்ப்பு - அதுவும் இந்த படமா?

Tap to resize

இந்நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக மாவீரன் படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் படமும் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவால் பரவி வருவதால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நெல்சன் இயக்கியுள்ள இப்படம் மாவீரன் படத்துக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படமும் மாவீரன் படமும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்துக்கு தான் அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பதால் மாவீரன் படத்தின் வசூலும் பாதிக்கப்படலாம். அதனால் இப்படம் தள்ளிப்போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அடுத்த படத்தில் லெஜெண்ட் சரவணனின் புதிய கெட்டப் இது தானா..! சும்மா மாஸாக இருக்காரே... வைரலாகும் போட்டோஸ்!

Latest Videos

click me!