தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதன்படி காக்க காக்க, துப்பாக்கி, அசுரன், கபாலி என இவர் தயாரித்த வெற்றிப்படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்ததாக இவர் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். அது என்னவென்றால் நடிகர் தனுஷின் மகனான லிங்கா தன்னிடம் பேசி அவரது தந்தைக்கு பட வாய்ப்பை பெற்றுக்கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி அந்த பேட்டியில் தாணு கூறி உள்ளார். அதன்படி ஒருநாள் ரஜினியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்தாராம் தாணு.
இதையடுத்து தனுஷ் காலா படத்தை தயாரித்த போது அப்படத்திற்கு முதலில் கபாலி 2 என பெயரிட இருந்தார்களாம். அந்த சமயத்தில் தாணுவை சந்தித்து இந்த டைட்டில் தொடர்பாக பேச சென்றுள்ளார் தனுஷ். அப்போது தனுஷும், தாணுவிடம் எப்போ சார் நாம படம் பண்ண போறோம் என கேட்டுள்ளார். இதைக்கேட்டு சிரித்த தாணு உங்களுக்கு முன் உங்க மகன் என்கிட்ட இதே கேள்விய கேட்டுட்டான் தம்பினு சொல்லி உரையாடினாராம் தாணு.
அதன்பின்னர் தான் இருவரும் இணைந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் பணியாற்றினர். இப்படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கினார். இப்படத்தின் ஷூட்டிங் சமயத்திலேயே வெற்றிமாறன் பற்றி தாணுவிடம் கூறி அசுரன் பட வாய்ப்பையும் தட்டித்தூக்கி இருக்கிறார் தனுஷ்.
இதையும் படியுங்கள்... ‘குக் வித் கோமாளி சீசன் 4’ போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியானது - அதிக சம்பளம் வாங்குவது இந்த பிரபலமா..!