தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'கேங்லீடர்' படத்தில் நடித்த பிரியங்கா மோகன், கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டாக்டர் படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த படம், ரசிகர்களை அதிகம் கவர்ந்தது மட்டும் இன்றி, டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படமும், 100 கோடி கிளப்பில் இணைந்தது.
அதே போல், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி வரும் இவர் அவ்வப்போது ரசிகர்கள் மனதை குளிர்விக்கும் விதமாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் பிங்க் நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: 'நீயா நானா' சூப்பர் அப்பா சீனி ராஜாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? விமர்சனங்களால் கண்ணீர் விட்டு கதறிய மனைவி!