தளபதி விஜய்யை வைத்து, 'பிகில்' படத்தை இயக்க பின்னர், ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதாக சுமார் 2 வருடங்கள் கார்த்திருந்தவர் இயக்குனர் அட்லீ. அட்லீ - ஷாருகான் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு, புனேவில் துவங்கப்பட்ட நிலையில், தற்போது 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் அட்லீ.
இந்நிலையில் ஜவான் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'ஜவான்' படத்துக்காக 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஷாருக்கானுடன் சண்டை போடும், காட்சி படமாக்கப்பட்டதாகவும், இந்த பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’. நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: கே.எஸ்.ரவிக்குமாரால் துப்பாக்கியில் சுடப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் தாயார்! நூல் இடையில் உயிர் தப்பிய சம்பவம்!