தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற அவருக்கு, அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால், படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கு நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா தான்.