நடிகர் அஜித், சினிமாவை தாண்டி பைக் ரைடிங் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய இளமை காலங்களில் கார் ரேசிங்கில் தீவிரமாக இருந்த அஜித், அதில் அடுத்தடுத்து விபத்துக்களில் சிக்கியதால், அதனை கைவிட்டார். அதன்பின் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அஜித், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பைக் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபகாலமாக அஜித் அதிகளவில் பைக் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். கடந்தாண்டு இந்தியா முழுவதும் தன்னுடைய பி.எம்.டபிள்யூ பைக்கில் வலம் வந்தார் அஜித். அவருடன் அவரது பைக் ரைடிங் குழுவினரும் சேர்ந்தே பயணித்து வருகின்றனர். பைக்கில் உலக சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் என்பதே நடிகர் அஜித்தின் நீண்ட நாள் கணவாக இருந்தது. அவரின் அந்தக் கனவு தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது.
கடந்தாண்டு இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிமுடித்த அஜித், அடுத்தபடியாக தன்னுடைய குழுவினருடம் கடந்த மாதம் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் தன்னுடைய உலக சுற்றுலாவை மேற்கொண்டார். வெற்றிகரமாக முதற்கட்ட உலக பைக் சுற்றுலாவை முடித்த அஜித், தன்னுடைய அடுத்தக்கட்ட பைக் சுற்றுலாவை வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறார். விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த பின்னர் அஜித் இரண்டாம்கட்ட உலக சுற்றுலாவை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ‘ஏன் இவ்ளோ சீக்கிரம் என்ன விட்டு போன’ திடீரென மரணமடைந்த அம்மா... குக் வித் கோமாளி பவித்ரா போட்ட எமோஷனல் பதிவு
இதனிடையே நடிகர் அஜித் தன்னைப்போல் பைக்கில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்காக ஏகே மோட்டோ ரைடு என்கிற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்காக இந்த நிறுவனத்தை அஜித் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தன்னுடைய சக ரைடருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான BMW பைக்கை பரிசாக நெகிழ வைத்துள்ளார் அஜித். அவரிடம் இருந்து பரிசு பெற்ற அந்த லக்கி நபர் பெயர் சுகத். இவர் அஜித்தின் பைக் பயணங்களில் பக்கபலமாக இருந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு அஜித் சிக்கிமில் பைக் ட்ரிப் சென்றிருந்தார். அதனை ஏற்பாடு செய்து கொடுத்தது சுகத் தானாம்.