வட இந்தியாவை சேர்ந்தவரான நடிகை ஹன்சிகா மோத்வானி, ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார். அந்த வகையில் அவரை முதலில் பேமஸ் ஆக்கியது தமிழ் சினிமா தான். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஹன்சிகா. அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த அவருக்கு, அடுத்ததாக விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்படி தொடர்ந்து சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக உயர்ந்தார் ஹன்சிகா. இவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகை குஷ்பு போலவே கொழு கொழுவென இருந்ததால் இவரை குட்டி குஷ்பு என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்க தொடங்கினர். கொழு கொழு அழகிற்கு பெயர்போன ஹன்சிகா, உடல் எடையை குறைத்ததால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... பிசினஸில் படு பிசியான அஜித்... தள்ளிப்போன விடாமுயற்சி ஷூட்டிங் - எப்போ ஆரம்பம் தெரியுமா?
இதனால் மார்க்கெட் இழந்த ஹன்சிகா, கடந்தாண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா, தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நடிகை ஹன்சிகா பற்றிய ஹாட் தகவல் ஒன்று தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்படி நடிகை ஹன்சிகா திரையுலகிற்கு வந்த புதிதில் அவருக்கு பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் அடிக்கடி டேட்டிங் வருமாறு அழைத்து டார்ச்சர் பண்ணியதாகவும், அவருக்கு தான் தக்க பாடம் புகட்டியதால், அதன்பின் அவர் தன் பக்கமே வருவதில்லை என அவர் பேட்டி ஒன்றில் கூறியதாகவும் தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. ஹன்சிகாவுக்கு டார்ச்சர் கொடுத்த நடிகர் யார் என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.