தமிழில் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா, இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இது ஜாதி ரீதியான உண்மைகளை உடைத்து இருந்தது.
25
Poonam bajwa
பின்னர் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறலாம். இதற்கிடையே இயக்குனர் சுந்தர் சிக்கு ஜோடியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்த இவர் மீண்டும் ஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் துரோகி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
முன்னதாக இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அங்குள்ள ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வைத்திருந்தார். பின்னர் மெல்ல மெல்ல இவருக்கு படவாய்ப்புகள் வருவது குறைந்து போனது. இதனால புசுபுசுவென இருந்த உடலை கட்டுடலாக மாற்றும் முயற்சியில் இருக்கிறார் பூனம்.
ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக திரை உலகில் அறிமுகமான பூனம் பஜ்வா சமீபகாலமாக கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்றி வந்தார்.
இந்நிலையில் லோநெக் , ஸ்லீவ் லெஸ் ஜிம்மிஸ் மட்டும் அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.