வெற்றிகரமாக 75 நாட்களை நிறைவு செய்த விக்ரம்..! இதுவரை வசூல் செய்தது மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

First Published | Aug 16, 2022, 9:19 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், வெற்றிகரமாக 75 நாட்களை நிறைவு செய்த நிலையில், இந்த படத்தின் தற்போதைய வசூல் குறித்த தகவல் வெளியாகி திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

பல வருடமாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வந்த, கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது அவர் தயாரித்து நடித்த 'விக்ரம்' திரைப்படம். இந்த படத்தை ஏற்கனவே கைதி, மாநகரம், மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில், வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருந்த ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் தான். அதிலும் ஏஜென்ட் டீனாவின் ஆக்‌ஷன் காட்சிகள் வேற லெவலில் இருந்தது என கூறலாம்.

மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இல்லாமல்... வெள்ளை கவுனில் விதவிதமாக போஸ் கொடுத்த நயன்தாரா! வைரலாகும் ஹனி மூன் போட்டோஸ்!
 

Latest Videos


அதே போல்... கடைசி 5 நிமிடங்கள் மட்டுமே வந்து ஒட்டு மொத்த வில்லன் நடிகர்களையும் ஓரம் காட்டினார் ரோலக்ஸ் சூர்யா. இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த படம்,  120 கோடி முதல் 140 கோடி வரை செலவில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் மூன்று மடங்கு வசூல் சாதனை செய்துள்ளது.

வெற்றிகரமாக 75 நாட்களை 'விக்ரம்' திரைப்படம், நிறைவு செய்துள்ள நிலையில்... இதுவரை 500 கோடி ரூபாய் வசூல்  சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், கமல் ரசிகர்களை இன்னும் உற்சாக படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்:' சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாக்கூரின்... டாப் லெஸ் மற்றும் பிகினி ஹாட் போட்டோஸ்!
 

click me!