kajal aggarwal
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரை உலகில் மிகப் பிரபலமானவர் காஜல் அகர்வால். இவர் இங்கு விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்ததன் மூலம் டாப் டென்னுக்கு வந்தவர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததை அடுத்த தெலுங்கு சினிமாவிற்கு சென்று விட்டார் காஜல் அகர்வால்.
kajal aggarwal
பிரசவ விடுமுறையில் இருந்த காஜல் அகர்வால் தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதோடு உலகநாயகனின் இந்தியன் 2வில் இருந்து இவர் விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார் காஜல்.
மேலும் செய்திகளுக்கு...வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாததால்.. சன் டிவிக்கு திரும்பிய ராதிகா?
kajal aggarwal
அதோடு அடிக்கடி தனது கணவன் மட்டும் மகனுடன் புகைப்படங்களுடன், கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் காஜல் அகர்வால் இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 37 வது பிறந்த நாளில் அவர் தனது மகனுடன் ஒரு படத்தை வெளியிட்டார். மேலும் என் விலைமதிப்பற்ற குழந்தை எனது சிறந்த பிறந்த நாள். அனைத்து அன்பு அரவணைப்பு மற்றும் இதய பூர்வமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சூர்யாவின் 'இரும்பு கை மாயாவி' சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
kajal aggarwal
இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தன் கணவரின் கன்னத்தில் முத்தமிட்டவாறு, உலகில் சிறந்த அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டு டேட்டிங்க்கு பிறகு கடந்த 2020இல் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.