சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் விருமன். இந்த படத்தை கிராமத்து நாயகனின் கதைகளை இயக்கும் முத்தையா இயக்கியுள்ளார். சங்கரின் மகள் அதிதி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் மூலம் அதிதி சங்கர் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ், மனோஜ் பாரதி உள்ளிட்டோர் இதில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 12ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.