இந்த தொடரின் மூலம் தான் ராதிகா ப்ரீத்தி மிகவும் பிரபலமானார். சமீபத்தில் தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் திரையுலக நாயகியானார். அதோடு கன்னட சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். ஆனால் தொடர் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது.
சரியான திரை உலக வாய்ப்புகள் அமையாததால் ராதிகா பிரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ஒரு தொடரில் தான் நாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.