நடிகர் விஜய்க்கு ஜோடியாக, 'சந்திரலேகா' படத்தில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில், திடீர் என திரையுலகை விட்டே திருமணம் செய்து கொண்டு, ஒதுங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், குக் வித் கோமாளி , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றினார். இதன் பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனில்... நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது... நண்பர்களுடன் மற்றும் தன்னுடைய மகள்களுடன் வெளியில் செல்வதை வழக்கமாக வைத்துள்ள வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ரோபோ ஷங்கர், விஜய் டிவி சீரியல் நடிகர் ப்ரஜின், மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பார்ட்டியில், ரோபோ ஷங்கருடன் குட்டி ஆட்டமும் போட்டுள்ளார் வனிதா இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.