பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பாசு, இவர் இந்தி நடிகர் கரண் சிங் குரோவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் விரைவில் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆக போகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி இருந்து வருகிறார்கள். இதனை வெளிப்படுத்தும் விதமாக பிபாஷா தாண்டிய கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு பிபாஷா மிகவும் உருக்கமாக கூறியுள்ளதாவது, "இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம், இருவர் மட்டுமே அன்பை பரிமாறிக்கொண்டிருந்தோம். தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. இது நம் அன்பின் வெளிப்பாடு என தன்னுடையை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.