அஜித் மூன்றாவது முறையாக, இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் தன்னுடைய 61-ஆவது படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்றுள்ளது.
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக, ஏர்போர்ட் வந்த போது... ஏர்போர்ட் பஸ்சில் மக்களோடு மக்களாக, இவர் பயணம் செய்த வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக பல பிரபலங்கள், ஏர்போர்ட்... மற்றும் பொது இடங்களுக்கு வந்தால், முகத்தில் முகமூடி போட்டு தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு, ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வந்தாலும் அதை தவிர்த்துவிடும் நிலையில், அஜித்தின் எளிமையும், ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் தான் இவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும், AK 61 -ஆவது படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.