பாலிவுட்டின் முன்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ராகுல் ஜெயின். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இளம்பெண் தான் ராகுல் ஜெயின் மீது ஓசிவரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியுள்ளதாவது : “பாடகர் ராகுல் ஜெயின் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். எனது ஆடை வடிவமைப்பு பணிகள் குறித்து பாராட்டி பேசிய ராகுல், ஒருகட்டத்தில் தனக்கான தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக என்னை நியமிக்க இருப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார்.