பிளாப் படங்களால் சம்பளத்தை குறைத்த தனுஷ்... திருச்சிற்றம்பலம் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?

First Published | Aug 16, 2022, 12:06 PM IST

Thiruchitrambalam : ஒரு படத்துக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை வாங்கி வந்த தனுஷ், தனது சமீபத்திய படங்கள் சரிவர போகாததால் திருச்சிற்றம்பலம் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் இவர் கோலிவுட்டில் கடந்த ஓராண்டாக சறுக்கலை தான் சந்தித்து உள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ் படங்களான ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் அவரது கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படங்களாக அமைந்தன. இந்த இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்ட படங்களாகும்.

இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ். அவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்பவராக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிக்க, தோழியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... புலி பட சம்பளத்தை மறைத்த விவகாரம்... விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிப்பு

Tap to resize

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். நடிகர் தனுஷும் இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி உள்ளார். இப்படத்திற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்துக்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்தில் நடிக்க ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஒரு படத்துக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை வாங்கி வந்த தனுஷ், தனது சமீபத்திய படங்கள் சரிவர போகாததால் திருச்சிற்றம்பலம் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... விசாரணை அதிகாரியாக அர்ஜுன்...வெளியானது செகண்ட் சிங்கிள்

Latest Videos

click me!