தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். மாதவனின் மின்னலே படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கவுதம் மேனன், அடுத்தடுத்து சூர்யாவுடன் காக்க காக்க, கமல் உடன் வேட்டையாடு விளையாடு, சிம்பு உடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அஜித் உடன் என்னை அறிந்தால் என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் கவுதம் மேனன்.