செட் ஆகல... காதல் திருமணம் செய்த 3 ஆண்டுகளில் விவாகரத்து... திடீரென கணவரை பிரிவதாக அறிவித்த பிக்பாஸ் பிரபலம்

Published : Aug 16, 2022, 07:41 AM ISTUpdated : Aug 16, 2022, 07:02 PM IST

BiggBoss Vaishnavi : மூன்று வருட காதல் வாழ்க்கை, மூன்று வருட திருமண வாழ்க்கை என மொத்தம் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிக்பாஸ் பிரபலம் தற்போது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

PREV
15
செட் ஆகல... காதல் திருமணம் செய்த 3 ஆண்டுகளில் விவாகரத்து... திடீரென கணவரை பிரிவதாக அறிவித்த பிக்பாஸ் பிரபலம்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைக்கும் அதுவே இந்த ஷோவின் ஸ்பெஷல்.

25

அவ்வாறு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிவந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான அஞ்சானை திருமணம் செய்து கொண்டார் வைஷ்ணவி.

35

மூன்று வருட காதல் வாழ்க்கை, மூன்று வருட திருமண வாழ்க்கை என மொத்தம் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த பிரிவு குறித்து வைஷ்ணவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “6 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்த நானும், அஞ்சானும் பிரிய முடிவெடுத்துள்ளோம்.

இதையும் படியுங்கள்... நைட் பார்ட்டியில் ரோபோ ஷங்கருடன் செம்ம ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்... வைரல் போட்டோஸ்..!

45

நான் இன்னும் அவனை லவ் பண்றேன். ஆனால் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்க பிரிவதே சிறப்பானது என நீண்ட ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்தோம். எங்கள் இருவருக்கும் இடையே நிறைய குணங்கள் பொதுவாக இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை உணர எங்களுக்கு இத்தனை வருடங்கள் ஆனது. 

55

என்ன நடந்திருக்கும் என யூகிக்க வேண்டாம், எங்களுக்கு எதுவும் மோசமாக நடக்கவில்லை. ப்ளீஸ் எங்களுக்காக யாரும் வருந்தாதீர்கள், ஏனெனில் நானும் அஞ்சானும் பிரிந்ததற்காக வருந்தவில்லை. நாங்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கிறோம். தம்பதிகளாக இருப்பதை விட நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் வைஷ்ணவி.

இதையும் படியுங்கள்... ஏர்போர்ட்டில் ரசிகர்கள் ஆசை நிறைவேற்றிய அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

click me!

Recommended Stories