தமிழ்நாட்டில் முதலிடம் மிஸ் ஆனாலும்... வெளிநாட்டில் அஜித், விஜய் படங்களை தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்

First Published Oct 2, 2022, 1:40 PM IST

அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் படத்தால் முறியடிக்க முடியாவிடாலும், வெளிநாட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதுவரை எந்த ஒரு தமிழ்படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை.

இருந்தாலும், தமிழ்நாட்டில் முதல் நாளில் இப்படத்தால் அதிக வசூல் ஈட்ட முடியவில்லை. தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல்நாளில் ரூ.27 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இதனால் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை தக்கவைத்து உள்ளன.

இதையும் படியுங்கள்... நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட பாக்யராஜ்... டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாந்தனு

ஆனால் வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் இருந்து வந்த நிலையில், அப்படத்தின் சாதனையை இரண்டே நாட்களில் முறியடித்து பொன்னியின் செல்வன் முதலிடம் பிடித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் இப்படம் 3.25 மில்லியன் டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்தில் 5 லட்சத்து 24 ஆயிரம் பவுண்டு வசூலித்து அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது பொன்னியின் செல்வன். முதலிடத்தில் இருக்கு ரஜினியின் 2.0 பட சாதனையை நாளை முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட தமிழ் பட நடிகை... தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதமும் சிக்கியது

click me!