தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது நானே வருவேன் திரைப்படம் வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியானதால் இப்படத்தின் வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
24
இருப்பினும் தனுஷும் செல்வராகவனும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். அவர்கள் இருவரும் அடுத்ததாக இணைய உள்ள படம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இப்படத்தை 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். அத்துடன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.
44
அதன்படி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது : “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் அந்த ரோலில் தனுஷ் நடிப்பார். முதல் பாகத்திலேயே அவர் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் தான் நான் நடித்திருந்தேன். தற்போது இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தாலும் சிறப்பாக இருக்கும்” என பார்த்திபன் கூறி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.