மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை கல்கி எழுதிய நாவலின் அடிப்படையில் இயக்கி உள்ளார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதிலும் முக்கியமானது கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டர் தான். அவரை வைத்து தான் படத்தின் கதையே நகரும்படி இருக்கும். தற்போது அந்த கேரக்டர் தான் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மணிரத்னம் தவறாக சித்தரித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் புகார் அளித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்தியும், திரித்துக் கூறி படமெடுத்துள்ளதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல உண்மைக்குப் புறம்பாக சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். சோழப் பேரரசரான ராஜராஜ சோழனின் படைத் தளபதியாக இருந்த வந்தியத்தேவனை தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் அவரைப்பற்றி தவறான எண்ண அலைகளைப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளதாகவும் அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான வரவேற்பு... இதவிட பெரிய சந்தோஷம் இல்ல - விக்ரம் எமோஷனல் பேச்சு