நடிகையும் - மாடலுமான பார்வதி நாயரின், திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மலையாள நடிகையான பார்வதி நாயருக்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இப்போது இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
26
15 வயதிலேயே மாடலிங் மீது ஆர்வம்:
நடிகை பார்வதி நாயர், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், இவருடைய தந்தை ஒரு துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்பதால், இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அபுதாபியில் தான். தன்னுடைய 15 வயதிலேயே மாடலிங் மீது இவருக்கு ஆர்வம் வந்த நிலையில், இவருடைய பெற்றோரும் அதற்க்கு உறுதுணையாக இருந்தனர்.
ஏராளமான அழகி போட்டிகளிலும் கலந்து கொண்ட பார்வதி நாயர்
ஸ்கூலிங்கை அபுதாபியில் நிறைவு செய்த பார்வதி, கல்லூரியை மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தொடர்ந்தார். அப்படியே மாடலிங்கில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை கைப்பற்றி பல விளம்பரங்களில் நடித்தார். ஏராளமான அழகி போட்டிகளிலும் கலந்து கொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின் டைட்டில் வின்னராக தேர்வானவர்.
46
ஹீரோயினாக நிலைக்க முடியாமல் போனது:
இதை தொடர்ந்து மிஸ் கர்நாடகா, மகுடம் சூடிய பார்வதி, இந்தியாவை பிரதிநித்துவம் செய்யும் விதமாக ஃபெமினா மிஸ் இந்தியா பேஜெட்டாக கலந்து கொண்டு ஸ்டேட் லெவலில் தேர்வானார். மாடலிங் துறையில் நிலையான இடம்பிடித்த இவருக்கு மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இவரால் ஒரு ஹீரோயினாக நிலைக்க முடியாமல் போன நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான 'நிமிர்ந்து நில்' படத்தின் ஒரு சிறு வேடத்தில் நடித்த பார்வதிக்கு, 2015- ஆம் ஆண்டு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் - த்ரிஷா நடிப்பில் உருவான 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக, நடித்து கவனத்தை ஈர்த்தார். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஆக்ட்டிவான நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், சமீபத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'கோட்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் ஆலம்பனா என்கிற படம் வெளியாக உள்ளது.
66
தொழிலதிபருடன் திருமணம்:
32-வயதை எட்டி விட்ட நடிகை பார்வதி நாயருக்கும் - சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவருக்கும் இன்று திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இவரின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா? அல்லது காதல் திருமணமா என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
பார்வதி நாயரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோல்டன் நிற சேலையில்... ட்ரடிஷ்னல் லுக்குள் பார்வதி நாயர் இருக்க, இவரின் கணவரும் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கிறார். இவர்களுக்கு கடந்த வாரம் தான் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஒரே வாரத்தில் திருமணமும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.