20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!

Published : Feb 10, 2025, 04:53 PM IST

Mahesh Babu Namrata Shirodkar 20th Wedding Anniversary : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் இன்று தங்களது 20ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

PREV
16
20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!
20ஆவது ஆண்டு திருமண நாள்: மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் 20 ஆண்டு காதல் கதை!

சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகர், நடிகைகளிடையே காதல், திருமணம், விவாகரத்து என்று எல்லாமே இருக்கும். இதில், தமிழ் சினிமா என்றால் சொல்லவே வேணாம். ஏராளமாகவே கிசுகிசு வரும், இதில் சில உண்மை சம்பங்களும் உண்டு. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் அதிகளவில் பிரபலங்களின் விவாகரத்து செய்தி தான் பரவலாக பேசப்பட்டது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!
 

26
20ஆவது ஆண்டு திருமண நாள்: மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் 20 ஆண்டு காதல் கதை!

ஒரு வருட, 2 வருடம், 4 வருடம் என்று காதல் திருமணம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அவர்களுக்கு எல்லாம் விதிவிலக்காக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 20 ஆண்டுகளாக காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இப்போது வரையில் இந்த காதல் ஜோடி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழந்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கையில் தாலியை எடுத்த கார்த்திக்; வில்லன் சோலி முடிஞ்சிது - கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய அப்டேட்!
 

36
20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!

வம்சி' படப்பிடிப்பில் மகேஷ் பாபுவும் நம்ரதா ஷிரோத்கரும் முதன்முதலில் சந்தித்தனர். 'வம்சி' படத்தில் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக நடித்தனர். நம்ரதாவை பார்த்தவுடன் மகேஷ் பாபு காதலில் விழுந்தார். வம்சி' படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!
 

46
20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!

மகேஷ் பாபுவும் நம்ரதா ஷிரோத்கரும் 5 ஆண்டுகள் டேட்டிங் செய்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன், நம்ரதா ஷிரோத்கர் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று மகேஷ் பாபு ஒரு நிபந்தனை விதித்தார். நம்ரதாவும் அதை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 10, 2005 அன்று மகேஷ் பாபுவும் நம்ரதா ஷிரோத்கரும் திருமணம் செய்துகொண்டனர். மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நம்ரதா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

56
20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!

மகேஷ் பாபு மற்றும் நம்ரதா தம்பதியினருக்கு கௌதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர். சித்தாரா எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருப்பார். அவர் சில புகைப்பட ஷூட்களிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் பிறந்து வளர்ந்த நம்ரதா Jab Pyaar Kisise Hota Hai என்ற ஹிந்தி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், மலையாளம் மொழிகளில் அறிமுகமான நம்ரதாவிற்கு வம்சி என்ற படம் தான் தெலுங்கு சினிமாவில் அறிமுகத்தை கொடுத்தது. அதே போன்று காதலையும் கொடுத்து தெலுங்கு நடிகரை மாப்பிள்ளையாகவும் கொடுத்தது.

66
20ஆவது ஆண்டு திருமண நாள்: 20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!

வம்சி படத்திற்கு பிறகு அஞ்சி மற்று மேஜர் ஆகிய தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார். மராத்தி மொழியிலும் நம்ரதா ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு வெளியான மேஜர் என்ற படத்தை தயாரித்திருந்தார். 2004ல் வெளியான Rok Sako To Rok Lo என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இது தான் அவருடைய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் ஒரு ஆடம்பர பங்களாவில் வசிக்கின்றனர். அவர்களின் இந்த ஆடம்பர பங்களாவின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories