பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இனி இந்த வாரம் நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த வாரம் சனிக்கிழமையன்று தனது அத்தையின் வீட்டிற்கு வந்த மீனாவிற்கு கோமதி சுடச்சுட வடை சுட்டுக் கொடுக்க ஆர அமர உட்கார்ந்து மீனா அதனை சாப்பிட்டார். அப்போது போன் போட்ட செந்தில் வீட்டிற்கு எப்போது வருவ, நான் காய்கறிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன் என்றார்.