
10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளில், விதவிதமான மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இல்லத்தரசியால் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம், குடும்பங்களோடு ஒன்றிய கதைகளை மையமாக வைத்து தொடர்கள் எடுக்கப்படுவதே.
20 வருடங்களுக்கு மேலாக, சீரியல்களின் TRP-யில் கெத்து காட்டி வரும் சன் டிவி-யில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 5 தொடர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?. இதில் முதல் இடத்தில் இருப்பது, சுந்தர் சி இயக்கத்தில்... ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'நந்தினி' தொடர் தான். "பழிவாங்க துடிக்கும் பாம்பு பேனாக மாறி வந்து, கொள்ளையடிக்கப்பட்ட கால சக்கரங்களை மீட்கிறதா?" என்பதை பயம், பக்தி, அமானுஷ்யம், காதல், செண்டிமெண்ட், திகில் என அனைத்தும் கலந்த கலவையாக இயக்கி இருந்தார். 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடர், தற்போது மீண்டும் சன் டிவியில் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் 'நந்தினி' தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. திரைப்படத்தில் வருவது போல், VFX காட்சிகள் இடம்பெற்றிருந்தது தனி சிறப்பாக பார்க்கப்பட்டது.
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட சீரியல்களின் லிஸ்டில், 2-ஆவது இடத்தில் இருப்பது, ராதிகா சரத்குமார் நடிப்பில், 2013- ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'வாணி ராணி' தொடர் தான். குடும்ப சென்டிமென்டில் எடுக்கப்பட்ட இந்த தொடரில் நடிக்க ராதிகாவுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. சுமார் 1700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்த தொடரில், வெளிநாட்டு லொக்கேஷன்களில் படமாக்கப்பட்ட சில எபிசோடுகள் தனித்துவமானதாக பார்க்கப்பட்டது.
இந்த லிஸ்டில் 3-ஆவது இடத்தில் இருப்பது, கிராமத்து கதைக்களத்தில்... அண்ணன் - தங்கை செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'வானத்தை போல' சீரியல் தான். 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடர், நீண்ட நாள் சன் டிவி புரோடக்ஷனில் இருந்தது. அதே போல் இந்த தொடருக்காக புதுமையான செட் டிசைன்கள், கலர்ஃபுல் காட்சிகள், உயர் தொழில்நுட்ப கேமரா வேலைப்பாடுகள் இருந்தது தனி சிறப்பு எனலாம்.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சன் டிவி தொடர்களின் லிஸ்டில், 4-ஆவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது வாணி போஜன் மற்றும் கிருஷ்ணா நடிப்பில் 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல். இந்த தொடர் Sun TV-யின் முக்கியமான பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்தது. தன்னுடைய பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
சன் டிவியில், சுமார் 1960 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான முக்கிய தொடர் தான் 'வள்ளி'. இந்த சீரியல் 2012-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய நேர ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்தது. குடும்ப சென்டிமென்டை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த தொடர், ஏராளமான இல்லத்தரசிகள் மனதை கவர்ந்த ஒரு தொடராகவும் இருந்தது. நீண்ட காலம் ஓடிய Sun TV சீரியலான, இதில் பெரிய செட் அரேஞ்ச்மெண்ட் மற்றும் தொடர்ச்சியான கதைத் திருப்பங்கள் இந்த சீரியலின் தனி சிறப்பாக பார்க்கப்பட்டது.