பாண்டியன் ஸ்டார் சீரியலில், இன்று முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா முதல் முதலில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் தான்அறிமுகமானார். இவரது கதாபாத்திரத்திலுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தாலும், இவரது துறுதுறு நடிப்பும், அழகும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
ஆரம்பத்தில் இவரை முல்லையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சில ரசிகர்கள் கூறிய நிலையில், பின்னர் இவரது நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. தற்போது 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லையாக நடித்து வருவது மட்டும் இன்றி, வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில், லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் கவின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'ஊர் குருவி'. என்ற படத்தில் நடிக்கிறார்.
அந்த வகையில், தற்போது இவர் தான் படித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கட்டிடக்கலை நிபுணராக வேண்டும் என்ற சிறிய எண்ணம், இறுதியாக நிறைவடைத்துவிட்டது. இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் வெளியிட வாணி போஜன், ஃபரீனா போன்ற பிரபலங்களும், இவரது ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.