Ponniyin selvan : தஞ்சை பெரிய கோவிலுக்கென்று காலம் காலமாக இருக்கும் சென்டிமெண்ட் காரணமாக தான் அங்கு பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளதால் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் இப்படத்தின் புரமோஷன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் டுவிட் ஒன்றை போட்டிருந்தார். அதில் “தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?” என குறிப்பிட்டு இருந்தார்.
24
இதன்மூலம் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து பொன்னியின் செல்வன் படக்குழு தங்களது புரமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் அவருடன் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
34
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு தொடங்கியது. இதன்மூலம் அவர்கள் தஞ்சையில் நடத்த இருந்த பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.
தஞ்சை பெரிய கோவிலுக்கென்று காலம் காலமாக இருக்கும் சென்டிமெண்ட் காரணமாக தான் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. பெரிய பதவியில் இருப்பவர்கள் யாரேனும் அந்த கோவிலுக்கு சென்றால் அவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பது தான் அந்த சென்டிமெண்டாம்.
தஞ்சை பெரிய கோவில் ஒரு குறிப்பிட்ட திசையில் அமைந்துள்ள நுழைவு வாயில் வழியாக செல்ல தவிர்ப்பதற்கும் இதுவே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் அந்த கோவில் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்களாம். தற்போது பொன்னியின் செல்வன் படக்குழுவும் அந்த பயத்தால் தான் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடத்தவில்லை என பேச்சு அடிபடுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.