நயன்தாராவை திருமணம் செய்த பின்னர், முதல் முறையாக கொண்டாடியுள்ள பிறந்தநாளை படு ரொமான்டிக்காக இந்த வருடம் கொண்டாடி சிறப்பித்துள்ளார். இதில் கெளதம் மேனன் போன்ற சில பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர் இது குறித்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி படு வைரலாக நயன் - விக்கி ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மா பிறந்தநாளை, கேரளாவில் கொண்டாடி மகிழ்ந்தனர் நயன் - விக்கி ஜோடி. அப்போது நயனின் அம்மா... தனக்கு இன்னொரு தாய் என வர்ணித்து, அவருக்கு நெற்றியில் முத்தமித்தபடி விக்கி வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு, அனைவராலும் பாராட்ட பட்டது. இப்படி ஒரு மருமகன் கிடைப்பது வரம் என, பலர் விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளினர்.
இதில் வழக்கம் போல், விக்னேஷ் சிவனுக்கு பிடித்த நிறமான சிவப்பு நிறத்திலேயே அலங்கரிக்கப்பட்ட இடத்தில், நயன் - விக்கி இருவருமே கருப்பு நிற உடையில் ஜொலிக்கிறார்கள். ஏற்னகவே இதே போன்ற செட்டப்பில் கடந்த ஆண்டு விக்கி பிறந்தநாள் செலிப்ரேட் செய்தார். அந்த செட்டப் விக்கிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதே போன்ற செட்டப்பை போட்டு விக்கிக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார் நயன்.